உடுமலை ராணுவப்பள்ளியில் படித்து முடித்த மாணவர்களுக்கு வழியனுப்பு விழா : கண்களை கவர்ந்த ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சிகள்

திருப்பூர் : உடுமலை ராணுவப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவா்களுக்கு வழியனுப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக நிகழ்ந்த ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

திருப்பூர் : உடுமலை ராணுவப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவா்களுக்கு வழியனுப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக நிகழ்ந்த ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. 



திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி நகரில் அமைந்துள்ள சைனிக் ராணுவ பள்ளியில் பிளஸ்-2 முடித்து செல்லும் மாணவர்களுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. இதில், சூலூா் விமானப்படை தளத்திலிருந்து கொண்டுவரப்பட்ட 4 ஹெலிகாப்டா்கள் மூலம் சாகச நிகழ்ச்சிகள் மற்றும் மாணவர்கள் நடத்திய அணிவகுப்பு மரியாதை நிகழ்வு நடைபெற்றது. இதில், ஏர் வைஸ் மார்சல் எல்.என்.சர்மா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அணி வகுப்பு மரியாதையை ஏற்றார்.



மத்திய பாதுகாப்புத்துறை மற்றும் மாநில அரசுகள் இணைந்து நாடு முழுவதும் 28 இடங்களில் சைனிக் ராணுவப் பள்ளிகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் உடுமலை அருகே அமராவதி நகரில் இந்த சைனிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ராணுவத்தில் சேருவதற்கான ஊக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் துப்பாக்கி சுடுதல், மலையேற்றம், குதிரை சவாரி, ஹெலிகாப்டா் இயக்கும் பயிற்சி உள்ளிட்ட ராணுவம் சார்ந்த பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் வருங்காலங்களில் சிறந்த ராணுவ அதிகாரிகளாக விளங்கும் வகையில் பாடத்திட்டங்கள், பயிற்சிகள் வழங்கப்படுகிறது.



இந்த ஆண்டு 12-ம் வகுப்பு முடித்து செல்லும் மாணவர்களின் பாசிங் அவுட் பரேடு மற்றும் சாரங்கி ஏரோபிக் எனும் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு கல்வியில் சிறந்த மாணவர், உடற்பயிற்சியில் சிறந்த மாணவர்களுக்கு கேடயங்களை வழங்கி ஏர் வைஸ் மார்சல் பாராட்டினார். பின்னர், சூலூர் விமானப்படை அதிகாரிகளால் சாரங்கி ஏரோபிக் எனும் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், விமானப்படை வீரர்கள் வானத்தில் சாகசங்களை நிகழ்த்தி காட்டியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...