கோவையில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் விபத்தில் சிக்கி பலி

கோவை : செல்வபுரம் அருகே பணி முடிந்து சென்று கொண்டிருந்த காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுகம் விபத்தில் சிக்கி பலியானார்.


கோவை : செல்வபுரம் அருகே பணி முடிந்து சென்று கொண்டிருந்த காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுகம் விபத்தில் சிக்கி பலியானார்.

செல்வபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் ஆறுமுகம். இவர் 1981-ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். இவர் வெரைட்டி ஹால் சாலையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் இன்று மதியம் பணி முடிந்து காவல் நிலையத்தில் இருந்து தனது தோட்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மாதம்பட்டி அருகே உள்ள எஸ்.ஆர். பெட்ரோல் பங்கு எதிரே பெட்ரோல் பங்கினர் வைத்துள்ள விளம்பர  டிவைடரில் மோதி ரத்தவெள்ளத்தில் சாலையில் கிடந்துள்ளார். 



அப்போது, அந்த வழியே குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்த ராணுவ வீரர் ஒருவர், தனது குடும்பத்தினரை விபத்து நடந்த இடத்தில் இறக்கி விட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த போலீசாரை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அருகே உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை கொடுக்க மறுக்கவே உடனடியாக அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அவரை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து பரிசோதித்ததில், காவலர் வழியிலேயே பலியானது தெரியவந்தது. 



இதையடுத்து, இவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் உள்ள பிரேத கிடங்கிற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பேரூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இறந்த காவலர் எம்.ஜி.ஆர்., முதலமைச்சராக இருந்தபோது பாதுகாப்பு காவலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...