மகளிர் திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 115.10 கோடி கடன் உதவி : தமிழக அரசுக்கு பயனாளிகள் நன்றி

கோவை : மகளிர் திட்டத்தின் மூலம் 442 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 115.10 கோடி வங்கி கடன் உதவி வழங்கிய தமிழக அரசுக்கு பயனாளிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

கோவை : மகளிர் திட்டத்தின் மூலம் 442 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 115.10 கோடி வங்கி கடன் உதவி வழங்கிய தமிழக அரசுக்கு பயனாளிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

பெண்கள் முன்னேற்றத்திற்கும் பெண்களின் வாழ்கைத் தரத்தினை மேம்படுத்துவதற்கும் பல எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தில் ஒன்றான மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மகளிர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதாகவும், சமூக பொருளாதாரத்தில் மகளிர்கள் பங்கெடுப்பது மட்டுமின்றி சுயசார்பு அடையும் நோக்கம் கொண்டதாகவும் விளங்குகின்றது.

தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கும் 01.06.2016 முதல் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

​கோவை மாவட்டத்தில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் சுய உதவிக்குழுக்களுக்கு கடந்த 2016-17 ஆண்டு 109 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.10.90 கோடியும், 2017-18 ஆண்டில் 149 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.93.30 கோடியும், 2018-19 ஆண்டு 184சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.10.90 கோடியும் என மொத்தம் 442 சுயஉதவிக்குழுக்களுக்கு தொழில் தொடங்க ரூ.115.10 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.​​​

மகளிர் திட்டத்தின் மூலம் ரூ. 115.10 கோடி வங்கி கடன் உதவி வழங்கிய தமிழக அரசுக்கு பயனாளிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...