கோத்தகிரி அருகே வீடு புகுந்து 13 சவரன் நகை கொள்ளை : போலீசார் விசாரணை

நீலகிரி : கோத்தகிரி அருகே வீட்டிற்குள் புகுந்து 13 சவரன் நகையைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நீலகிரி : கோத்தகிரி அருகே வீட்டிற்குள் புகுந்து 13 சவரன் நகையைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

கோத்தகிரி காமராஜர் சதுக்கம் புனித லூக்கா ஆலயத்தில் பணியாற்றி வருபவர் வேதமுத்து. இவர், வழக்கம் போல் ஆலயத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது மனைவி வேதமுத்துவிற்கு துணிகளைக் கொண்டு கொடுத்துவிட்டு, திரும்பி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, பீரோவில் இருந்த துணிகள் கீழே சிதறி கிடந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், பீரோவை திறந்து பார்த்த போது, அதில் இருந்த நகைகள் திருடப்பட்டது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, வேதமுத்துவை அழைத்து தகவல் தெரிவிக்கப்பட்டு, நகை திருட்டு குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.



அதனடிப்படையில், கோத்தகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். பின்னர், இத்திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கொள்ளையர்களை காமராஜர் சதுக்கம், பேருந்து நிலைய சி.சி.டி.வி. கேமரா மூலம் பதிவான காட்சிகளை வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...