டெல்லி : சினிமா டிக்கெட், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு இன்று குறைத்துள்ளது.

31-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் டெல்லியில் நிதி அமைச்சர் ஜெட்லி தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 22 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து குறைக்கப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி.யில் அதிகபட்ச வரியிலிருந்து பெரும்பாலான பொருட்களை விலக்கிவிட்டோம். ஜி.எஸ்.டி.யில் 34 பொருட்கள் மட்டுமே 28 சதவீத வரி வரம்பில் இருக்கும். இவை அனைத்தும் ஆடம்பர பொருட்கள் ஆகும். யாத்திரிகர்களுக்கான சிறப்பு விமானத்தில் பொருளாதார வகுப்பு டிக்கெட் மீதான ஜி.எஸ்.டி. 5 சதவீதமாகவும், பிசினஸ் வகுப்பு கட்டணம் மீதான ஜி.எஸ்.டி. 12 சதவீதமாகவும் குறைக்கப்பட்டு உள்ளது.
பவர் பேங்குகள், வீடியோ கேம்ஸ், சிறு விளையாட்டு உபயோகப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், மாற்றுத்திறனாளிகள் சாதனங்கள் 28 சதவீத பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ரூ. 100-க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட் கட்டணங்கள் மீதான ஜி.எஸ்.டி. 18 லிருந்து 12 சதவீதமாகவும், ரூ.100க்கு மேல் உள்ள கட்டணத்திற்கான ஜி.எஸ்.டி. 28-லிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வங்கி கட்டணம் (சேமிப்பு கணக்கு மற்றும் ஜன்தன் யோஜனா) ரத்து மானிட்டர்கள், டிவிக்கள், டயர் ஆகியவை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் வாகனங்களுக்கான பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சோலார் உற்பத்தி கருவி பொருட்கள், காலணிகள், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள் மீதான ஜி.எஸ்.டி., குறையும். வரிக்குறைப்பு வரும் ஜனவரி மாதம் 1-ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும். பணக்காரர்கள் பயன்படுத்தும் ஏசி, டிஸ்வாஷர்கள் ஆகியவை 28 சதவீத பட்டியலில் நீடிக்கும். 3 வகையான ஆட்டோமொபைல் சாதனங்கள், சிமென்ட் துறை பயன்படுத்தும் 8 வகையான பொருட்கள் 28 சதவீதத்தில் நீடிக்கும், இவ்வாறு ஜெட்லி கூறினார்.