சினிமா டிக்கெட், வீட்டு உபயோகப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைப்பு

டெல்லி : சினிமா டிக்கெட், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு இன்று குறைத்துள்ளது.

டெல்லி : சினிமா டிக்கெட், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு இன்று குறைத்துள்ளது. 

31-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் டெல்லியில் நிதி அமைச்சர் ஜெட்லி தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 22 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து குறைக்கப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி.யில் அதிகபட்ச வரியிலிருந்து பெரும்பாலான பொருட்களை விலக்கிவிட்டோம். ஜி.எஸ்.டி.யில் 34 பொருட்கள் மட்டுமே 28 சதவீத வரி வரம்பில் இருக்கும். இவை அனைத்தும் ஆடம்பர பொருட்கள் ஆகும். யாத்திரிகர்களுக்கான சிறப்பு விமானத்தில் பொருளாதார வகுப்பு டிக்கெட் மீதான ஜி.எஸ்.டி. 5 சதவீதமாகவும், பிசினஸ் வகுப்பு கட்டணம் மீதான ஜி.எஸ்.டி. 12 சதவீதமாகவும் குறைக்கப்பட்டு உள்ளது.

பவர் பேங்குகள், வீடியோ கேம்ஸ், சிறு விளையாட்டு உபயோகப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், மாற்றுத்திறனாளிகள் சாதனங்கள் 28 சதவீத பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ரூ. 100-க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட் கட்டணங்கள் மீதான ஜி.எஸ்.டி. 18 லிருந்து 12 சதவீதமாகவும், ரூ.100க்கு மேல் உள்ள கட்டணத்திற்கான ஜி.எஸ்.டி. 28-லிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வங்கி கட்டணம் (சேமிப்பு கணக்கு மற்றும் ஜன்தன் யோஜனா) ரத்து மானிட்டர்கள், டிவிக்கள், டயர் ஆகியவை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் வாகனங்களுக்கான பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சோலார் உற்பத்தி கருவி பொருட்கள், காலணிகள், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள் மீதான ஜி.எஸ்.டி., குறையும். வரிக்குறைப்பு வரும் ஜனவரி மாதம் 1-ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும். பணக்காரர்கள் பயன்படுத்தும் ஏசி, டிஸ்வாஷர்கள் ஆகியவை 28 சதவீத பட்டியலில் நீடிக்கும். 3 வகையான ஆட்டோமொபைல் சாதனங்கள், சிமென்ட் துறை பயன்படுத்தும் 8 வகையான பொருட்கள் 28 சதவீதத்தில் நீடிக்கும், இவ்வாறு ஜெட்லி கூறினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...