திருப்பூர் : திருப்பூரில் விவசாய நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை முதல் 7 மாவட்டங்களில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விவசாய நிலங்கள் வழியே மின் கோபுரம் அமைத்துக் கொண்டு செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனால், திருப்பூர், கோவை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. விவசாய நிலங்களில் கோபுரங்கள் அமைத்து மின்சாரம் கொண்டு செல்லாமல், நெடுஞ்சாலை ஓரங்களில் கேபிள் வழியாகக் கொண்டு செல்லக் கோரியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் விவசாய நிலங்களின் மீது கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 8 மாவட்டங்களில் விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கள்ளிபாளையத்தில் நடைபெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 6-வது நாளாக நடத்தப்பட்டு வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் வாயில் கருப்புத் துணி கட்டி பங்கேற்றுள்ளனர். மேலும், கழுதையிடம் மனு அளித்தும், மாதிரி மின் கோபுரத்தை பாடை கட்டி ஊர்வலமாகக் கொண்டு வந்தும் விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விவசாயிகள் போராட்டம் குறித்து தெரிவித்த கருத்துக்கு உயர்மின் அழுத்த கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்க தலைவர் கொங்கு ராஜாமணி கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், அவர் கூறியதாவது :- விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறார்கள். தங்களுக்கு இழப்பீடு உயர்த்தி தருவதாக மட்டுமே அமைச்சர் தெரிவித்திருக்கிறார். மாற்றுத் திட்டங்கள் குறித்து பேசாததாலேயே பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி நாளை முதல் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.