வெலிங்டனில் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்ட 400 இளம் ராணுவ வீரர்கள்

நீலகிரி : குன்னுார் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் 400 இளம் ராணுவ வீரர்கள் இன்று சத்தியபிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

நீலகிரி : குன்னுார் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் 400 இளம் ராணுவ வீரர்கள் இன்று சத்தியபிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாமில் தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி பெறும் வீரர்கள், இந்தியாவின் எல்லை பகுதிகளில் உள்ள முகாம்களுக்குப் பணிபுரிய அனுப்பி வைக்கப்படுவர். 46 வாரங்கள் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களில் 400 பேர் பயிற்சி முடித்து, ராணுவ வீரர்களாக பணிபுரிய சத்தியப்பிரமாணம் ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. 



பயிற்சிக்கு செல்லும் ராணுவ வீரர்கள், பகவத்கீதை, பைபிள், குரான் புத்தகங்கள் மற்றும் தேசிய கொடி மீது உப்பு உட்கொண்டு சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். ராணுவ பேண்ட் இசைக்கேற்றவாறு ராணுவ வீரர்கள் கம்பீர அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. 

பயிற்சி வீரர்களின் கம்பீரமான அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட ராணுவ மருத்துவனை பிரிகேடியர் பங்கஜ் பி ராவ் கமாண்டென்ட், சிறந்த 5 வீரர்களுக்குப் பதக்கங்களை வழங்கிக் கவுரவித்தார். 



தங்களது பிள்ளைகள் ராணுவ வீரர்களாக அணிவகுத்து வந்த காட்சியைக் கண்ட வீரர்களின் பெற்றோர், நாட்டின் பாதுகாப்புக்காக அனுப்புவதை எண்ணி பெருமிதம் அடைந்தனர். பயிற்சியை முடித்த 400 ராணுவ வீரர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பட்டாலியன்களுக்கு அனுப்பப்படுவர். இந்நிகழ்ச்சியில் உயர் ராணுவ அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள், ராணுவ வீரர்கள், பெற்றோர்கள், பயிற்சி ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...