பல்லடம் அருகே பள்ளிவேன் ஏறியதில் மாணவன் பலி : ஓட்டுநருக்கு வலை வீச்சு

திருப்பூர் : பல்லடம் அருகே ஓட்டுநரின் கவனக்குறைவால் பள்ளி மாணவன் மீது பள்ளிவேன் ஏறிய விபத்தில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் : பல்லடம் அருகே ஓட்டுநரின் கவனக்குறைவால் பள்ளி மாணவன் மீது பள்ளிவேன் ஏறிய விபத்தில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர், பல்லடம் அருகே அக்ராணம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பரமசிவம்(36). இவரது மகன் சஞ்சீவ்குமார்(10) பல்லடம் பொள்ளாச்சி சாலையிலுள்ள பாரதி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் இன்று மாலை பள்ளி முடிந்து வழக்கம் போல் சக மாணவர்கள் சிலருடன் பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பியுள்ளான். 

இதையடுத்து, பள்ளிப் பேருந்து அக்ராணம் பகுதியில் நின்று மாணவர்களை இறக்கிவிட்ட போது, பேருந்திலிருந்து மாணவன் சஞ்சீவ்குமார் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கவனிக்காத ஓட்டுநர் பேருந்தை நகர்த்தியுள்ளார். அப்போது மாணவன் மீது பேருந்து ஏறியதில் சிறுவன் சஞ்சீவ்குமார் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தான். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து பெற்றோர் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் பல்லடம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, விரைந்து சென்ற காவல்துறை, சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 



மேலும், இந்த விபத்து தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய தனியார் பள்ளி வேன் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...