கோவை : வாலாங்குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் குளத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கிப் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : வாலாங்குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் குளத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கிப் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், சுங்கம் பைபாஸ் சாலையைச் சேர்ந்தவர் சார்லஸ் (37). இவர் அருகேயுள்ள வாலாங்குளத்தில் வெள்ளிக்கிழமை நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, குளத்திற்குள் இறங்கி ஆழமான பகுதிக்குச் சென்று மீன் பிடிக்க முயன்றுள்ளார்.
இதற்கிடையில், எதிர்பாராத விதமாக சகதியில் சிக்கி தண்ணீரில் மூழ்கியுள்ளார். நீச்சல் தெரியாததால் உதவிக்கு சார்லஸ் கூக்குரலிட்டு கத்தியுள்ளார். அவருடைய சத்தம் கேட்டு, அருகில் இருந்த மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மண்டல தலைமை தீயணைப்பு நிலைய அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பின்பு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சார்லஸின் உடலை மீட்டனர். அதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.