திருப்பூர் : நாட்டின் வளர்ச்சிக்காகக் கொண்டு வரப்படும் திட்டங்களினால் ஏற்படும் இடர்பாடுகளை பொறுத்துக்கொள்ள வேண்டும் எனவும், விவசாயிகள் கோரிக்கை எதுவானாலும் அரசிடம் பேசி நல்ல முடிவினை எடுக்க வேண்டும் என திருப்பூரில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான மாற்றுப் பொருட்களின் கண்காட்சி மற்றும் குப்பை மேலாண்மை கண்காட்சி தொடங்கப்பட்டது. 3 நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியினை மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை. கே. ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- விவசாய நிலங்கள் வழியே மின்கோபுரம் கொண்டு செல்வதால் பாதிக்கப்படும் விவசாயிகளை ஏற்கனவே முதலமைச்சரிடம் அழைத்து சென்று பேச வைத்துள்ளோம். அப்போது, உரிய இழப்பீடு தருவதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.

சில வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படும் போது இடர்பாடுகள் வருவது இயல்பு. மின்சாரத்துறை அமைச்சர் மீண்டுமொருமுறை விவசாயிகளை சந்தித்து குறைகளைக் கேட்கவும் தயாராக இருக்கிறார். அவர்களுக்கான வசதிகளையும் மேம்படுத்தித் தர தயாராக இருக்கிறோம்.

மேலும், ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ள நிலையில், அவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக திருப்பூரை கொண்டுவர அணைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.