சென்னை : கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை நிறைவேற்ற அ.தி.மு.க அரசு சுமார் ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உரையாற்றினார்.

நகராட்சி நிர்வாக ஆணையரகம், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் தமிழ்நாடு நகர்ப்புற முதலீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான செயல்திறன் சார்ந்த ஆளுமை மேம்பாட்டை மேலும், பண்படுத்துவதற்காக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் ஓட்டலில் இன்று பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. அதனை செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், "தமிழ்நாட்டில் குடிநீர் வழங்கல் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டில் கீழ் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகள் ஆகியன உள்ளன. முந்தைய முதலமைச்சர் அம்மாவின் ஆட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் திட்டப் பணிகள், சாலை வசதிகள், மழைநீர் வடிகால், தெரு விளக்கு பராமரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, பாலங்கள் போன்ற அடிப்படை வசதிகளுக்காக ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது.
அவர்களின் வழியில் செயல்படும் எடப்பாடி தலைமையிலான அரசு மக்கள் நலத் திட்டப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு நல்லாட்சி புரிந்து வருகிறது. இந்த ஆட்சியில் 2 ஆண்டு காலத்தில் ரூ.20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும், அதிமுக அரசின் கொள்கைக்கு ஏற்ப, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், பல்வேறு குடிநீர் விநியோக திட்டங்கள் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன," என்றார்.
இந்த கருத்தரங்கில், குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், நிதி சேவை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் காகர்லா உஷா உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.