நீலகிரி வனப்பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் : கண்காணிப்பு பணிகள் தீவிரம்

நீலகிரி : மஞ்சூர், கெத்தை வனப்பகுதிகளில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து காவல்துறை சார்பில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி : மஞ்சூர், கெத்தை வனப்பகுதிகளில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து காவல்துறை சார்பில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக - கேரளா எல்லையையொட்டி கெத்தை வனப்பகுதி அமைந்துள்ளது. கெத்தை வனத்தில் தேக்கு, சந்தனம் உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள், மூலிகை செடிகள் அதிகளவில் உள்ளது. இப்பகுதியில் மாவோயிஸ்டுகள் சுற்றித் திரிய வாய்ப்புள்ளதாகத் தகவல் வந்ததையடுத்து, வனத்துறை மற்றும் சிறப்பு அதிரடிப்படை காவல்துறை இணைந்து கண்காணிப்பு பணியைப் பலப்படுத்தி உள்ளனர். 



இதனைத் தொடர்ந்து மின்நிலையம், மின்வாரிய குடியிருப்பு, வனப்பகுதிக்கு போதிய பாதுகாப்பு அளித்துள்ளனர். மேலும், அவ்வழியாக வரும் வாகனங்களைச் சோதனை செய்வதுடன், அடையாளம் தெரியாத நபர்கள் குறித்தும் கண்காணித்து வருகின்றனர். அந்த பகுதியில் புதிய நபர்கள் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். 



இந்த பாதுகாப்பு பணியின் மற்றொரு பகுதியாக, தமிழக கேரள எல்லையில் உள்ள மஞ்சூர் காவல் நிலையத்தை சுற்றிலும் நூற்றுக்கணக்கான மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு புதிய நபர்கள் நடமாட்டம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாகக் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...