கோவை நீதிமன்றத்தில் உள்ள 49 காலிபணியிடங்களுக்கு வெளிப்படையான நேர்முக தேர்வு

கோவை : அலுவலக உதவியாளர்கள், தோட்டக்காரர் உள்ளிட்ட கோவை நீதிமன்றத்தில் உள்ள 49 காலிபணியிடங்களுக்கு வெளிப்படையான நேர்முக தேர்வு நடக்கும் என மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் தெரிவித்துள்ளார்.

கோவை : அலுவலக உதவியாளர்கள், தோட்டக்காரர் உள்ளிட்ட கோவை நீதிமன்றத்தில் உள்ள 49 காலிபணியிடங்களுக்கு வெளிப்படையான நேர்முக தேர்வு நடக்கும் என மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் தெரிவித்துள்ளார்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- காலியாக உள்ள 33 அலுவலக உதவியாளர்கள் மற்றும் 16 தோட்டக்காரர், துப்புரவு தொழிலாளி, இரவுக்காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு 9,827 பேருக்கும், பிற பணிகளுக்கு 1,706 பேருக்கும் வருகிற 22,23 தேதிகளில் கோவையில் நடைபெறும் நேர்முக தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு வெளிப்படையான நேர்முக தேர்வு நடைபெறும். வேலைக்காக யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். நேர்முக தேர்வுகள் வீடியோ பதிவு செய்யப்படும். 24-ம் தேதி இரவு தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்படும். யாரேனும் வேலை வாங்கித் தருவதாக பணம் கேட்டால் தன்னிடம் நேரடியாக புகார் அளிக்கலாம். முறைகேடுகளில் ஈடுபடும் விண்ணப்பதாரர்கள் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். 



கோவை நீதிமன்றத்தில் வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளின் விசாரணை தகவல்களை தெரிந்து கொள்ள இ-கோர்ட் திட்டம் மூலம் ஒருங்கிணைந்த பதிவெண் வழங்கும் முறை செயல்படுத்தப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

கோவை மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேலின் இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூடுதல் முதன்மை நீதிபதி குணசேகரன் உடனிருந்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...