நீலகிரி : பிளாஸ்டிக் இல்லா நீலகிரியை உருவாக்க சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் நட்சத்திர ஹோட்டல் சார்பில் இருசக்கர விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் இயற்கையையும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் கையுறைகள் உள்ளிட்ட பல்வேறு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனைப் பற்றிய விழிப்புணர்வுக்காக மாவட்ட எல்லைகள் மற்றும் சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பலகைகள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, பிளாஸ்டிக் இல்லா நீலகிரியை உருவாக்கும் நோக்கில் உதகையில் இயங்கி வரும் நட்சத்திர ஹோட்டல் சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அதன் தீமைகள் குறித்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், இப்பேரணியானது நகராட்சி பொறியாளர் ரவி கொடியசைக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தொடங்கியது. அங்கிருந்து புறப்பட்டு உதகை அரசு தாவரவியல் பூங்கா, கமர்சியல் சாலை, லோயர் பஜார் வழியாகப் படகு இல்லத்தில் நிறைவடைந்தது. இதில் சுமார் 50 -க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளுடன் பேரணியாகச் சென்றனர்.