உதகையில் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் தூய்மை ரத வாகன யாத்திரை தொடக்கம்

உதகையில் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் தூய்மை ரத வாகன யாத்திரை தொடக்கம்

நீலகிரி : மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக மாவட்ட மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தூய்மை ரத வாகன யாத்திரை இன்று தொடங்கியது.

தமிழக அரசின் முதன்மைசெயலரும், உணவு பாதுகாப்புத் துறை ஆணையருமான அமுதா உதகை காந்தல் பகுதியில் தூய்மை ரத வாகன இயக்கத்தை தொடங்கி வைத்தார். மாவட்டத்திலுள்ள 35 ஊராட்சிகளுக்கு செல்லும் இந்த தூய்மை ரதம், வரும் 2-ந் தேதி வரை தூய்மை இந்தியா திட்டத்தின் பயன்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறினார். 



இதைதொடர்ந்து, செய்தியாளர்களிடம் உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அமுதா பேசியதாவது :- தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதிலும் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. இதிலும், குறிப்பாக, நீலகிரி மாவட்டம் தமிழகத்தில் பிளாஸ்டிக் இல்லாத முன் மாதிரி மாவட்டமாக இருக்கிறது. நாகரீகம் என்ற பெயரில் கடந்த 25 ஆண்டுகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. 

வரும் 2019 ஜனவரி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதையடுத்து, அதற்குப் பதிலாக மக்காச்சோளக் கழிவு, மரவள்ளி கிழங்குக் கழிவு, கரும்பு சக்கையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மாற்றுப் பொருட்களை வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்த முன் வர வேண்டும், என்றார். 

மேலும், மாநிலத்தில் ஆங்காங்கே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்கப்படுவது, பதுக்கி வைப்பது குறித்த தகவல் கிடைத்தால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்," எனக் கூறினார். 

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...