பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பில் இணைந்து என்.ஜி.பி கல்லூரி மாணவர்கள்

கோவை: என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசில் இணையும் நிகழ்ச்சி இன்று அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கோவை: என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசில் இணையும் நிகழ்ச்சி இன்று அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.



இளைஞர்கள் காவல்துறையினருக்கு உதவும் விதமாக பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பேர் இந்த அமைப்பில் உள்ளனர். 

இந்த நிலையில், என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசில் இணையும் நிகழ்ச்சி இன்று அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவர்கள் சரவணம்பட்டி காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளிலும், பீளமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் இவர்கள் சேவையாற்ற உள்ளனர்.



இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகர காவல்துறை (தலைமையிடம்) துணை ஆணையர் தர்மராஜன் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், "கல்வியில் சமுதாய பாடங்கள் குறைந்து வருகிறது. இதனால் மாணவர்களிடம் சமுதாய சிந்தனையும் குறைந்து வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். மாணவர்கள் அர்த்தமான வாழ்க்கையை வாழ வேண்டும்.

பணம் ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்தால் அது அர்த்தமான வாழ்க்கையாக இருக்காது. மாணவர்கள் சமுதாய சிந்தனையோடு பொது மக்களுக்கு உதவும் நோக்கத்தில் செயல்பட வேண்டும். அதற்கு மாணவர்கள் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் போன்ற அமைப்புகளில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்." என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் டாக்டர்.தவமணி பழனிசாமி, நாட்டு நலப்பணித் திட்டம் ஒருங்கிணைப்பாளர் டாக்டர். எஸ்.நமசிவாயம் மற்றும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...