கோவை மாநகராட்சிக்கு எதிரான போராட்டத்தை ஒத்திவைக்கக் கோரிக்கை: திட்டமிட்டபடி 31-ம் தேதி போராட்டம் நடத்த அனைத்துக்கட்சிகள் முடிவு

கோவை: குடிநீர் விநியோக ஒப்பந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற இருக்கும் போராட்டத்தை ஒத்திவைக்க போலீசார் வேண்டுகோள் விடுத்த நிலையில், திட்டமிட்டபடி 31-ம் தேதி போராட்டத்தை நடத்த அனைத்துக்கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

கோவை: குடிநீர் விநியோக ஒப்பந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற இருக்கும் போராட்டத்தை ஒத்திவைக்க போலீசார் வேண்டுகோள் விடுத்த நிலையில், திட்டமிட்டபடி 31-ம் தேதி போராட்டத்தை நடத்த அனைத்துக்கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

கோவை மாநகர குடிநீர் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகளை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 'சூயஸ்' என்ற தனியார் நிறுவனத்திடம் 26 ஆண்டுகளுக்கு மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்காட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இதனிடையே, ஜூலை 31-ம் தேதி அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவது என முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பாக அனைத்துக் கட்சியினர் மற்றும் போலீசார் இடையே ஆர்.எஸ்.புரம் காவல்நிலையத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், சட்டம், ஒழுங்கு துணை ஆணையாளர் லட்சுமி, உதவி ஆணையாளர்கள் வெங்கடேஷ் மற்றும் ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரசியல் கட்சிகள் சார்பில் தி.மு.க., எம்.எல்.ஏ. கார்த்திக், காங்கிரஸின் மயூரா ஜெயகுமார், சி.பி.எம்.மின் அஜய்குமார் சி.பி.ஐ.,யின் சுந்தரம், ம.தி.மு.க.,வின் மோகன்குமார், வி.சி.,வின் இலக்கியன், த.பெ.தி.க.,வின் கு. இராமகிருட்டிணன் உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அப்போது, காவல்துறையின் தரப்பில் இருந்து கூறுகையில், "இந்த ஒப்பந்தம் அரசு போட்ட ஒப்பந்தம். எதிர்க்கட்சிகள் நடத்தும் இந்தப் போராட்டம் அரசுக்கு எதிரானது. எனவே, இந்தப் போராட்டத்திற்கு அனுமதிக்க முடியாது," எனத் தெரிவித்தனர். ஆனால், இது மக்களுக்கான குடிநீர் பிரச்சனை என்பதால் இப்போராட்டம் உறுதியாக நடைபெறும் அனைத்துக் கட்சியினர் கூறினர். இதனையடுத்து, கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவதை தவிர்த்து, வழக்கமாகப் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் இடத்தில் நடத்த வேண்டும் என போலீசார் வலியுறுத்தினர். ஆனால், இதனை ஏற்க மறுத்து அரசியல் கட்சியினர், இது குறித்து கலந்து பேசி முடிவெடுத்து அறிவிப்பதாகக் கூறி கலைந்து சென்றனர்.



இதனைத் தொடர்ந்து, கோவை மாநகர தி.மு.க., அலுவலகத்தில் எதிர்க்கட்சிகளின் மாவட்ட செயலாளர்களின் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஜூலை 31-ல் நடைபெறும் போராட்டத்தை எவ்வித தொய்வும் இல்லாமல் நடத்துவது, அதற்கான தயாரிப்பு பணிகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...