போத்தனூர் ரயில்வே பாலத்திற்கு ஒதுக்கிய தொகையில் குளறுபடி: எது சரியான தொகை?

கோவை: போத்தனூர் ரயில்வே மேம்பாலத்திற்கு ஒதுக்கிய நிதி தொடர்பாக, அ.தி.மு.க.,வினர் வைத்த பேனர்களிலும், அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலும் வெவ்வேறு விதமான தொகைகள் குறிப்பிடப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


கோவை: போத்தனூர் ரயில்வே மேம்பாலத்திற்கு ஒதுக்கிய நிதி தொடர்பாக, அ.தி.மு.க.,வினர் வைத்த பேனர்களிலும், அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலும் வெவ்வேறு விதமான தொகைகள் குறிப்பிடப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.



போத்தனூர் செயின்ட் ஜோசப் சர்ச் அருகே தொடங்கும் இந்த ரயில்வே பாலம், செட்டிபாளையம் சாலையில் உள்ள வெள்ளிங்கிரி காம்ப்ளக்ஸ் அருகே முடிவடைகிறது. 1.1 கி.மீ., நீளம் கொண்ட இந்த ரயில்வே மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.

இந்த பாலம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பல்வேறு குழப்பங்கள் நீடிக்கிறது. முன்னதாக, பாலம் திறந்து வைக்கப்படுவதற்கு முன், அந்த பகுதியில் வழக்கம் போல அ.தி.மு.க., தொண்டர்கள் பேனர்களை வைத்தனர். அதில் இருந்த ஒவ்வொரு பேனர்களிலும் வித்தியாசமான தொகை குறிப்பிடப்பட்டிருந்தது.



ஒரு பேனரில், பாலத்திற்காக ரூ.31.93 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், மற்றொரு பேனரில், ரூ.24.86 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், அப்பகுதி மக்கள் குழப்பமடைந்தனர்.



இந்த சூழலில், தற்போது மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் போத்தனூர் ரயில்வே மேம்பாலம் ரூ.22 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



ஆளும் கட்சியினரின் பேனர் தொகைக்கும், மாவட்ட நிர்வாகத்தின் செய்திக்குறிப்பில் உள்ள தொகைக்கும் சுமார் ரூ.9 கோடி வித்தியாசம் வருகிறது.

இதனால், இந்த நிதியில் எது உண்மையாக பாலத்திற்காக ஒதுக்கப்பட்டது? என்றும், ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பாலத்திற்கு செலவிடப்பட்டதா? என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

Newsletter

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...