ராமநாதபுரம் அருகே வங்கியில் அடிக்கடி ஒலிக்கும் எச்சரிக்கை அலாரத்தால் பரபரப்பு

கோவை: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ரெட்ஃபீல்ட்ஸ் கிளையில் நேற்று இரவு திடீரென எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ரெட்ஃபீல்ட்ஸ் கிளையில் நேற்று இரவு திடீரென எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ரெட்ஃபீல்ட்ஸ் கிளையானது ராமநாதபுரம் அகில இந்திய வானொலி நிலையம் அருகே உள்ளது. இந்த வங்கியில் அடிக்கடி எச்சரிக்கை அலாரம் தானாக அடிப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட திடீர் அலாரம் ஒலித்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து, பின்னர் வங்கி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அலாரம் நிறுத்தப்பட்டது.



இந்த சூழலில், நேற்று இரவும் திடீரென அந்த வங்கியில் எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. இதனால் ராமநாதபுரம் திருச்சி சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வங்கியில் அடிக்கடி தேவையில்லாமல் எச்சரிக்கை அலாரம் ஒலிப்பது ஆபத்தானது. இப்படி தேவையில்லாமல் எச்சரிக்கை அலாரம் அடிப்பது ஆபத்தான நேரத்தில் பயன்படாமல் போய்விடும்.

ஆகவே வங்கி நிர்வாகம் இந்த விஷயத்தை அலட்சியப்படுத்தாமல் தேவையில்லாத நேரங்களில் அலாரம் ஏன் ஒலிக்கிறது? என்பதை ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும் என்பதே அப்பகுதியிலுள்ள மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...