டி.டி.வி., தினகரன் தன்னை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார் : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி காட்டம்

கோவை: கோவையில் நடைபெற்ற அ.ம.மு.க., பொதுக்கூட்டத்தில் டி.டி.வி தினகரன் தன்னை பற்றி தரம் தாழ்ந்து விமர்சித்திருப்பதாகவும், அவர் விமர்சித்தது உண்மை எனில் எந்தக் கோவிலிலும் வந்து சொல்லட்டும் என அமைச்சர் வேலுமணி காட்டமாக பதிலளித்துள்ளார்.

கோவை: கோவையில் நடைபெற்ற அ.ம.மு.க., பொதுக்கூட்டத்தில் டி.டி.வி தினகரன் தன்னை பற்றி தரம் தாழ்ந்து விமர்சித்திருப்பதாகவும், அவர் விமர்சித்தது உண்மை எனில் எந்தக் கோவிலிலும் வந்து சொல்லட்டும் என அமைச்சர் வேலுமணி காட்டமாக பதிலளித்துள்ளார்.

ஆர்.எஸ்.புரம், பாலசுந்தரம் சாலை என ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 113 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று தொடங்கி வைத்தார். முன்னதாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் திவான் பகதூர் சாலையை மாதிரி சாலையாக உருவாக்கும் பணியை ஆரம்பித்து வைத்தார். 



பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை தொடங்கி வைத்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும். எதிர்க்கட்சிகள் எத்தனை இடையூறுகள் செய்தாலும் 24 மணிநேர குடிநீர் திட்டம் கோவைக்கு கொண்டு வரப்படும். நதியை சீரமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியைக் கொண்டு நொய்யலில் கழிவு கலப்பதை முற்றிலும் நிறுத்தப்படும், என்றார். 



மேலும், கோவையில் நடைபெற்ற அ..ம.மு.க., பொதுக்கூட்டத்தில் டி.டி.வி., தினகரன் விமர்சித்தது குறித்த கேள்விக்கு அமைச்சர் வேலுமணி பதிலளிக்கையில், "ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் நான் பணியாற்றியதை தரம் தாழ்ந்து தினகரன் விமர்சித்திருக்கிறார். அத்தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலின் போது தான் அம்மாவட்ட செயலாளராக இருந்த சண்முகவேலு தலைமையில் வடுகப்பட்டியில் தான் பணியாற்றினேன். உண்மையில்லாத பலவற்றை கூறும் தினகரன், அதுபோன்ற கருத்துக்களை எந்த கோவிலிலும் சொல்லட்டும். 

இதேபோல, தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ள தினகரன், தி.மு.க.,வை விமர்சிப்பதில்லை. தினகரனுக்காக சட்டமன்றத்தில் தி.மு.க.,. எம்.எல்.ஏ., அன்பழகன் எழுந்து குரல் எழுப்புகிறார். ஒன்றரை கோடி அ.தி.மு.க.,வினரும் அம்மாவின் வாரிசுகளாவர். தன்னைத் தானே அம்மாவின் வாரிசு என கூறிக் கொண்டு தினகரன் கட்சி ஆரம்பித்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். ஆர்.கே., நகர் இடைத்தேர்தலில் பணத்தை காட்டி வென்றது போல், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைக் காட்டி வெளிமாநில தொழிலாளர்களை வைத்து பொதுக்கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார்," இவ்வாறு கூறினார். 

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...