ரஜினிமக்கள் மன்றத்தில் இணைவது குறித்து சிந்திக்கவில்லை : கோவையில் தமிழருவி மணியன் பேட்டி

கோவை: காந்திய மக்கள் இயக்கத்தைக் கலைத்துவிட்டு, ரஜினி மக்கள் மன்றத்தில் இணைவது குறித்து சிந்திக்கவில்லை என அவ்வியக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.



கோவை: காந்திய மக்கள் இயக்கத்தைக் கலைத்துவிட்டு, ரஜினி மக்கள் மன்றத்தில் இணைவது குறித்து சிந்திக்கவில்லை என அவ்வியக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

கோவையில் காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் அவ்வியக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது :- தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது கனவாகவே உள்ளது. டாஸ்மாக் வருவாயைக் கூட்டுவதில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. பீகாரில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தியதைப் போல, தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும். படிப்படியாக ஒராண்டிற்குள் தமிழகம் மதுவற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். ஸ்டெர்லைட், மீத்தேன், ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராடும் அமைப்புகள், ஏன் மதுக்கடைகளுக்கு எதிராக போராடவில்லை..?. 



ஊழலைப் பாதுகாக்கும் வகையில் தான் லோக் ஆயுக்தாவை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த லோக் ஆயுக்தாவை கிழித்து குப்பையில் எறிய வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு 60 நாட்களுக்கு மேல் நீடிக்க வாய்ப்பே இல்லை. சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்குவதோடு, மக்கள் ஆதரவோடு இந்தத் திட்டம் செயல்படுத்த வேண்டும். 

உரிய நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவார். கமல்ஹாசன் அவசர அவசரமாகக் கட்சி தொடங்கி, அடிப்படை அமைப்பைக் கட்டமைக்க முடியாமல் உள்ளார். 80 விழுக்காடு கட்சி அடிப்படை கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள 20 விழுக்காடு பணிகள் முடிவடைந்ததும், ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார். 3 மாத இடைவெளி கூட தேர்தலை சந்திக்க ரஜினிக்கு போதுமானது. இதுவரை பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக ரஜினிகாந்த் ஒருவார்த்தை கூட சொல்லவில்லை. மேலும், முள்ளை முள்ளால் எடுப்பது போல, கலைத்துறையில் இருந்து வந்தவர்களால் மலிந்த ஊழலை ரஜினி அகற்றுவார். நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார். நடிகர் கமலஹாசன் சூப்பர் ஆக்டர்.  மக்கள் ஆதரவு இருப்பதால் தான் 40 ஆண்டுகளாக ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். 

எப்போது கட்சி தொடங்குவது குறித்து ரஜினிகாந்த் தான் முடிவு செய்வார். ரஜினி முதலமைச்சராக நாங்கள் ஆதரவு தருகிறோம். ரஜினிகாந்திற்கு துணையாக இருப்போம். ரஜினி மக்கள் மன்றத்தில் இணைப்பது குறித்து சிந்திக்கவில்லை. பா.ஜ.க., அனாதையாக இருக்கிறது என்பதை நான் சொல்லி தான், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதை முதலில் சொன்னது ரஜினி தான், இவ்வாறு அவர் கூறினார். 



முன்னதாக, பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும், லோக் ஆயுக்தாவை கூர்மைப்படுத்தக் கோரியும் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் கோவை காந்திப்பார்க்கில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...