திருப்பூரில் லோக் அதாலத் மூலம் 1,393 வழக்குகளில் தீர்வு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற லோக் அதாலத்தின் மூலம் 1,393 வழக்குகளில் ரூ. 54,65 கோடி அளவில் இழப்பீடு பெற்றுத் தரப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற லோக் அதாலத்தின் மூலம் 1,393 வழக்குகளில் ரூ. 54,65 கோடி அளவில் இழப்பீடு பெற்றுத் தரப்பட்டது. 



திருப்பூரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி அல்லி தலைமையில் லோக் அதாலத் நடந்தது. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் வழக்குகளை விசாரித்து தீர்வு ஏற்படுத்தினர். மேலும், அவிநாசி, பல்லடம், தாராபுரம், காங்கயம், உடுமலை நீதிமன்றங்களிலும் இந்த நிகழ்வு நடந்தது. மாவட்ட அளவில் மொத்தம் 3,154 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. அதில், 1,393 வழக்குகளுக்கு ரூ. 54,65,98,719 கோடி மதிப்பில் சமரச தீர்வு ஏற்படுத்தப்பட்டது. 



குறிப்பாக, திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியைச் சேர்ந்த 108 வயதான கருணையம்மாள் என்ற மூதாட்டிக்கு, 2017-ம் ஆண்டு அவரது மகன் விபத்தில் இறந்ததில் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து ரூ. 10 லட்சம் இழப்பீடு பெற்று தரப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் செய்திருந்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...