டவுன்ஹால் அருகே 350 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

கோவை: டவுன்ஹால் அடுத்த தாமஸ் வீதி பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 350 கிலோ எடையிலான பான்மசாலா, குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


கோவை: டவுன்ஹால் அடுத்த தாமஸ் வீதி பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 350 கிலோ எடையிலான பான்மசாலா, குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்  பறிமுதல் செய்தனர்.

கோவை தாமஸ் வீதி பகுதியில் சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான பூட்டியிருந்த அறை ஒன்றில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக வந்த தகவலை அடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று மாலை அங்கு சோதனையிட சென்றனர்.

ஆனால் அந்த கட்டிடத்தில் வாடகைக்கு இருந்த லோகநாதன் என்பவர் குட்கா பொருட்கள் இருந்த அறையை பூட்டு போட்டு சென்றார். இதனையடுத்து வீட்டை திறக்கும்படி சொல்லியும் திறக்கப்படாததால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வீட்டை பூட்டி சீல் வைத்துச் சென்றனர்.



இந்நிலையில், இன்று காலை காவல் நிலையத்திற்கு வந்த கட்டிட உரிமையாளர் சந்தோஷ், வாடகைக்கு இருக்கும் லோகநாதனை பூட்டைத் திறந்து விட சொல்லி இருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து காவல் துறையினரும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் சீல் வைக்கப்பட்ட வீட்டை திறந்து உள்ளே சென்று சோதனையிட்டனர்.

அப்போது வீட்டில் சுமார் 350 கிலோ எடையிலான குட்கா மற்றும் பான்மசாலா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.



அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடந்த மூன்று மாதமாக வீட்டை வாடகைக்கு எடுத்து லோகநாதன், குட்கா பொருட்களை பதுக்கி  வைத்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களின் மதிப்பு சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் எனவும் இது தொடர்பாக லோகநாதன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...