கோவையில் அடுத்த நான்கு நாட்களுக்கு காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் - வேளாண் பல்கலை., தகவல்

கோவை: காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் மரங்களின் கிளைகள் அல்லது வளைந்து வளர்ந்துள்ள மரங்கள் கீழே விழும் அபாயம் உள்ளது.

கோவை: காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் மரங்களின் கிளைகள் அல்லது வளைந்து வளர்ந்துள்ள மரங்கள் கீழே விழும் அபாயம் உள்ளது. அதனால் மரங்களுக்கு கீழே நிற்க வேண்டாம் எனவும் கால்நடைகளை மரங்களுக்கு கீழே கட்ட வேண்டாம் என்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நம்மிடம் கூறுகையில், "கோவையில் அடுத்த நான்கு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மழைக்கும் வாய்ப்புள்ளது. 

இதனிடையே பகல் நேர வெப்ப நிலையானது 30 முதல் 31 டிகிரி செல்சியாஸ்-ஆகவும், இரவு நேர வெப்ப நிலை 20 முதல் 21 டிகிரி செல்சியாஸ்-ஆகவும் நிலவ வாய்ப்புள்ளது.

காற்றின் வேகம்:

கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களைப் பொறுத்தவரையில் 18 முதல் 20 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீச வாய்ப்புள்ளது. 

வெற்று இடங்களில் சூழல் காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால் சிதிலமடைந்த மரங்களையும், மர கிளைகளையும் முன்கூட்டியே அகற்றிவிடுவது நல்லது.

அதே போன்று, வாழை மரங்களுக்கு முட்டுக் கொடுக்க வேண்டும், கரும்புகளுக்கு கயிறு கட்டி காற்றின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள வேண்டும்.

திருப்பூர் மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது, பல்லடம், உடுமலைபேட்டை போன்ற பகுதிகளில் உள்ள காற்றாலைகள் மூலம் மின்சாரம் அதிக அளவில் கிடைக்க வாய்ப்புள்ளது." என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...