பேரிடர் பயிற்சியின் போது உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரண நிதியை வழங்கினார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: கோவையில் பேரிடர் பயிற்சியின் போது உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரணநிதியில் இருந்து அறிவிக்கப்பட்ட 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் வழங்கினார்.

கோவை: கோவையில் பேரிடர் பயிற்சியின் போது உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரணநிதியில் இருந்து அறிவிக்கப்பட்ட 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் வழங்கினார்.



கோவையில் பேரிடர் பயிற்சியின் போது நேற்று மாலை  மாணவி லோகேஸ்வரி என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 5 லட்சம் ஒதுக்கப்பட்டது. 

இந்நிலையில் கோவை நாதேகவுண்டன் புதூரில் உள்ள மாணவியின் குடும்பத்தினர் வீட்டிற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். பின்னர் முதல்வர் பொது நிவாரணநிதியில் இருந்து அறிவிக்கப்பட்ட 5 லட்ச ரூபாய் நிதிக்கான காசோலையை  மாணவியின் பெற்றோரிடம் அமைச்சர் வேலுமணி வழங்கினார்.



பின்னர் அவர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, பயிற்சியாளர் ஆறுமுகம் மீது கொலை வழக்கு பதிய காவல் துறையிடம் அறிவுறுத்தி இருப்பதாகவும், அவர் செய்தது தவறான செயல் எனவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...