நீலகிரியில் யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

நீலகிரி: நீலகிரியில் வனப்பகுதிகளில் யானை வழித்தடங்களில் உள்ள விடுதி உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி: நீலகிரியில் வனப்பகுதிகளில் யானை வழித்தடங்களில் உள்ள விடுதி உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மலைப்பிரதேசங்களில் உள்ள யானை வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், யானை வழித்தடங்களில் உள்ள கட்டுமானங்கள் மற்றும் 400 தனியார் விடுதிகளை அகற்ற நேற்று உத்தரவு பிறப்பித்தது.

மழைக்காலங்களில் நீலகிரி மாவட்டத்தில் 18,000 யானைகள் இடம் பெயர்கின்றன. யானைகள் செல்லும் வழியில் புதிய கட்டுமானங்களை அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது. யானை வழித்தடத்தில் கட்டுமானத்தை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். யானைகள் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டுள்ளதால், அவை ஊருக்குள் புகுந்து மக்களுக்கும், பயிர்களுக்கும் பெருத்த சேதத்தை ஏற்படுத்துகின்றன. யானைகள் வழிமாறி ஊருக்குள் புகுந்து மனிதர்களை தாக்கும் சம்பவமும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. எனவே, அதன் வழித்தடத்தில் உள்ள கட்டிடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யானை வழித்தடங்களில் கட்டிடம் கட்டக்கூடாது என நீதிமன்ற தடைவிதித்த பிறகு, 400 புதிய விடுதிகள் கட்டப்பட்டுள்ளதாகவும், அவற்றை இடிக்க வேண்டும் என யானை ராஜேந்திரன் நீதிபதிகளிடம் கேட்டதையடுத்து, அவற்றை அகற்ற தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறும் போது, "நீதிமன்ற உத்தரவு இன்னும் வரவில்லை. உத்தரவு வந்தால் தான் என்ன விவரம் என தெரிய வரும். உத்தரவு குறித்து எங்கள் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து முடிவு செய்வோம். யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் அறிக்கை மற்றும் செயல்திட்டத்தை சமர்ப்பிக்க அறிவுறுத்தினால் சமர்ப்பிக்கப்படும்" என்றார்.​

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...