பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

கோவை: கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது உயிரிழந்த கல்லூரி மாணவியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கோவை: கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது உயிரிழந்த கல்லூரி மாணவியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

நரசீபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து மாணவர்கள்,மாணவிகள் கீழே விரிக்கப்பட்ட வலையில் குதித்து பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சியின் போது, மாணவி லோகேஸ்வரி (18) என்பவர் மாடியில் இருந்து குதிக்க பயந்தபடி அமர்ந்திருந்தார்.

அவரை கீழே குதிக்கும்படி தெரிவித்த பயிற்சியாளர் ஆறுமுகம், மாணவியை கீழே தள்ளிவிட்டார். அப்போது எதிர்பாராத விதமாக முதலாவது மாடியின் சன்-சேடில் மாணவியின் கழுத்து பகுதி மோதி பலத்த காயம் ஏற்பட்டு மரணமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக மாணவர்களுக்கு பயிற்சி அளித்த ஆறுமுகம் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல என்று தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவித்திருந்தது.

இந்த சூழலில், உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி அளிப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி.பழனிசாமி அறிவித்துள்ளார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...