குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 12-வது கொண்டை ஊசி வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து

நீலகிரி: குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள 12-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயற்சித்த போது லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.


நீலகிரி: குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள 12-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயற்சித்த போது லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இன்று காலை 10 மணியளவில் நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் அருகே சென்னையில் இருந்து ஊட்டிக்கு புல் கட்டுகள் ஏற்றி வந்த லாரி 12-வது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.



இந்த விபத்தில், லாரியில் இருந்த ஓட்டுனர் மற்றும் கிளீனர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது.

இதனால், அவ்வழியாகச் சென்ற அனைத்து வாகனங்களும் கோத்தகிரி-ஊட்டி சாலை வழியாக திருப்பி விட்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்பு படையினர், தற்போது லாரியை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக மழை பெய்து வரும் சூழலில் அங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்குமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...