கோவை: கோவையில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி கொடுக்கும் போது மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கோவை அருகே நரசீபுரம் பகுதியில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகின்றது. இந்த கல்லூரியில் நேற்று மாலை 4 மணி அளவில் தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியானது நடைபெற்றது. தேசிய பேரிடர் மேலாண்மையை சேர்ந்த பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவர் 20 மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார்.
அப்போது, கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து மாணவர்கள்,மாணவிகள் கீழே விரிக்கப்பட்ட வலையில் குதித்து பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சியின் போது, மாணவி லோகேஸ்வரி (18) என்பவர் மாடியில் இருந்து குதிக்க பயந்தபடி அமர்ந்திருந்தார்.
அவரை கீழே குதிக்கும்படி தெரிவித்த பயிற்சியாளர் ஆறுமுகம், மாணவியை கீழே தள்ளிவிட்டார். அப்போது எதிர்பாராத விதமாக முதலாவது மாடியின் சன்-சேடில் மாணவியின் கழுத்து பகுதி மோதி பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து மாணவி லோகேஸ்வரி சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே அவர் பலியானர்.
முறையான பாதுகாப்பின்றி நடத்தப்பட்ட இந்த பேரிடர் மேலாண்மை பயிற்சியால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது என்று பரவலாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில், மாணவி உயிரிழப்பு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கல்லூரி மாணவி உயிரிழப்பு குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உரிய பாதுகாப்புடன் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும்." என்றார்.

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், " மாணவி உயிரிழந்த சம்பவத்தில் கவனக்குறைவாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடர் பயிற்சி தந்தவர் தனியார் பயிற்சியாளர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மாணவி மரணத்திற்கு கல்லூரி நிர்வாகம் தான் பொறுப்பு. இதில் கல்லூரி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.