நீலகிரி: நீலகிரியில் தொடர் மழை காரணமாக ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கேரளா, தமிழகம், கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லைப் பகுதியாக நீலகிரி மாவட்டம் திகழ்ந்து வருகிறது. ஆண்டுதோறும் இங்கு மே மாத இறுதியில் தொடங்கும் தென் மேற்கு பருவ மழை செப்டம்பர் மாதம் வரை பெய்யும்.

இந்த மழையின் காரணமாக மின் உற்பத்திக்கு பயன்படும் அணைகளான குந்தா, அப்பர் பவானி, கெத்தை, பைக்காரா போன்ற அணைகளின் நீர் மட்டம் வெகுவாக உயரும். இந்த நீர் இருப்பைக் கொண்டு சுமார் 833 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இதில் நீலகிரி மாவட்டத்திற்கு 76 மெகா வாட் மின் பயன்படுத்தப்பட்டு மீதமுள்ள 757 மெகா வாட் கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற தொழில் நகரங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது, நீலகிரி மாவட்டத்தில் 833 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், உதகை நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் புறங்களில் மூன்று நாட்களுக்கும் மேலாக மின் வெட்டு அதிகரித்து வருவது உள்ளுர் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
பருவ மழைக் காலங்களில் மின் தேவையை பொது மக்களுக்கு சீராக வழங்க மின் வாரியம், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.