பேராசிரியர் நிர்மலாதேவியின் வழக்கை செப்டம்பரில் இருந்து 6 மாதத்திற்குள் முடிக்க உத்தரவு

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை செப்டம்பர் மாதத்தில் இருந்து 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என கீழமை நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை செப்டம்பர் மாதத்தில் இருந்து 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என கீழமை நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியின் பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஏப்ரல் மாதம் 16-ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் பேராசிரியை நிர்மலாதேவியையும், அவர் தன்னை செல்போனில் பேசத்தூண்டியதாக சுட்டிக்காட்டிய மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரையும் கைது செய்தனர். மூவரையும் போலீஸ் காவலில் எடுத்தும் விசாரித்தனர்.

இவர்கள் 3 பேரையும் மூன்று மாதங்களுக்கு மேலாக காவலில் எடுத்து விசாரித்தும், இதில் தொடர்புடைய உயரதிகாரிகள் யார்..? என்ற விவரத்தைப் போலீசாரால் வெளிக் கொண்டுவர முடியவில்லை. மாறாக, கைதான மூவர் தொடர்பான ஆவணங்களை தயாரிக்கும் பணியிலேயே ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்தகட்ட நடவடிக்கைக்கு இன்னும் இந்த வழக்கு நகரவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.

இந்த நிலையில், நிர்மலாதேவி தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆறாவது முறையாக மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிர்மலாதேவி மீதான வழக்கை செப்டம்பர் 24-ஆம் தேதியில் இருந்து 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி., போலீசார் தாக்கல் செய்யவும், முதல்கட்ட குற்றப்பத்திரிகையை வரும் 16-ஆம் தேதி விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் சி.பி.சி.ஐ.டி.,க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கு ஜாமீன் வழங்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...