இந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவராக பதவியேற்றார் லட்சுமிநாராயணசாமி

கோவை: சுகுணா இன்டஸ்ட்ரீஸ்-ன் நிர்வாக இயக்குநராக பதவி வகிக்கும் லட்சுமிநாராயணசாமி தற்போது, இந்திய தொழில் வர்த்தக சபை-யின் (கோவை) தலைவராக பதவியேற்றார்.

கோவை: சுகுணா இன்டஸ்ட்ரீஸ்-ன் நிர்வாக இயக்குநராக பதவி வகிக்கும் லட்சுமிநாராயணசாமி தற்போது, இந்திய தொழில் வர்த்தக சபை-யின் (கோவை) தலைவராக பதவியேற்றார்.

84-வது பொதுக்குழு கூட்டத்தின் போது நடைபெற்ற தேர்தலில் அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவரைப் பற்றி., பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரியில் மேலாண்மை படிப்பை முடித்த லட்சுமிநாராயணசாமியின் தலைமையில் சுகுணா நிறுவனமானது மத்திய கிழக்கு நாடுகள், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் தனது தொழிலை விரிவுபடுத்தியுள்ளது. 

அனிஷ்குமார் ஸ்பின்னிங் மில்ஸ் என்ற நிறுவனத்திலும் இவர் நிர்வாக பங்குதாரராக பதவி வகித்து வருகிறார். சுகுணா அறக்கட்டளை மூலமாக ஏழை மக்கள் கல்விக்காகவும், நல்வாழ்வுக்காகவும் பல்வேறு சேவைகளை செய்துள்ளார்.

வகித்த பதவிகள்

தென்னிந்திய இயந்திர உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவராகவும், இந்திய தொழில் வர்த்தக சபை-யின் (கோவை) பொருளாளராகவும், துணைத் தலைவராகவும் பதவி வகித்தார்.

தற்போது, பி.எஸ்.ஜி., அறக்கட்டளை குழு உறுப்பினராகவும், மத்திய எக்ஸ்சைஸ் கமிஷனரகத்தில், ஜி.எஸ்.டி., ஆலோசனை பிரதிநிதியாகவும் பதவி வகிக்கிறார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...