தொடர் மழையால் மாயமான புட்டுவிக்கி சாலை : மூன்றே மாதங்களில் ரூ.11 கோடி வீண்

கோவை : மூன்று மாதங்களுக்கு முன் போடப்பட்ட புட்டுவிக்கி சாலை முழுவதுமாக பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

கோவை : மூன்று மாதங்களுக்கு முன் போடப்பட்ட புட்டுவிக்கி சாலை முழுவதுமாக பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். 

ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரையிலான போக்குவரத்து நெரிசலை குறைக்க, மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேம்பால பணிகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு, பாலக்காடு, மற்றும் குனியமுத்தூர் மார்க்கமாக வரும் பேருந்துகள் மற்றும் வாகனங்களை திருப்பி விட குனியமுத்தூர் அரசு பள்ளியிலிருந்து, புட்டுவிக்கி சாலை செல்ல ரூ. 11 கோடி மதிப்பீட்டில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையும், தடுப்பு சுவரும் அமைக்கப்பட்டது.



அவசர அவசரமாகப் போடப்பட்ட இந்த சாலை மூன்று மாதங்களே ஆனநிலையில், குண்டும்-குழியுமாக தற்போது காட்சியளிக்கின்றது.

இதனிடையே, தற்போது மழை பெய்து வருவதால், இந்த புதிய சாலை அனைத்தும் மோசமாகி, சகதியாக மாறிவிட்டது. 

தார் சாலை போடப்பட்ட தடயமே இன்றி முழுவதுமாக மண் சாலையாக மாறியுள்ளது. 



தற்போது மாற்றுப்பாதையாக உள்ள புட்டுவிக்கி சாலையில் அதிக அளவில் வாகனங்கள சென்று வருகின்றன. குண்டும் குழியுமான சாலையால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவ்வப்போது சிறு சிறு விபத்துகளில் சிக்குகின்றனர். 

அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டுகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...