பிளீச்சிங் கழிவுகளால் நுரையுடன் பாயும் நொய்யல்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கோவை: நொய்யல் ஆற்றில் பிளீச்சிங் கழிவுகள் கலப்பதால் தற்போது ஆற்று நீர் நுரை பொங்க பாய்ந்து வருகிறது.


கோவை: நொய்யல் ஆற்றில் பிளீச்சிங் கழிவுகள் கலப்பதால் தற்போது ஆற்று நீர் நுரை பொங்க பாய்ந்து வருகிறது.

நீண்ட நாட்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த நொய்யல் ஆற்றில் தற்போது கலக்கப்படும் கழிகளினால் நுரை பொங்கிவருவது இயற்கை ஆர்வலர்களையும் விவசாயிகளையும் வேதனையடையச் செய்துள்ளது. 

இது குறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த மணிகண்டன் கூறுகையில், "புட்டுவிக்கி குளம் அருகே பிளீச்சிங் கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் காரணமாகவே தற்போது நொய்யலில் நுரை பொங்கி வருகிறது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் இரண்டு முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. முன்பைவிட தற்போது அதிக அளவில் நுரை பொங்கி வருகிறது. இதனால் அதிகபட்ச அளவில் கழிவு நீர் கலந்திருப்பதாக சந்தேகம் எழுகிறது. உடனடியாக இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்." என்றார்.

மேலும், சொட்டையாண்டி குட்டை, கங்கநாராயண சமுத்திரம், பேரூர் பெரியகுளம் மற்றும் செங்குளம் ஆகிய குளங்களில் இருந்து வரும் நீர் குனியமுத்தூர் வாய்க்காலில் நுழையாமல் தடுக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தொடர்பு கொள்ள முயன்ற போது, அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...