யுனெஸ்கோ சின்னங்களை பொதுப் போக்குவரத்தின் மூலம் பார்வையிட்டு கோவைக் குழுவினரின் சாதனை முயற்சி

வட மாநிலங்களில் உள்ள 7 யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களை பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி திட்டமிடப்பட்ட நேரத்திற்குள்ளாகவே பார்வையிட்டு கோவை குழுவினர் கின்னஸ் சாதனை முயற்சி மேற்கொண்டனர்.


வட மாநிலங்களில் உள்ள 7 யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களை பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி திட்டமிடப்பட்ட நேரத்திற்குள்ளாகவே பார்வையிட்டு கோவை குழுவினர் கின்னஸ் சாதனை முயற்சி மேற்கொண்டனர். 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26-ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் சிக்ரியில் சுவீடனைச் சேர்ந்த வெளிநாட்டுத் தம்பதியினர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால், நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்ற கருத்து தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டது. எனவே, நமது நாட்டின் மீதான இந்தத் தவறானக் கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக, கோவையைச் சேர்ந்த 21 பேர் கொண்ட குழுவினர் முடிவு செய்தனர். 



அதாவது, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தலைநகர் டெல்லியில் உள்ள 7 யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களை, வெறும் 12 மணிநேரத்திற்குள், அதுவும் பொது போக்குவரத்தைப் பயன்படுத்திப் பார்க்கும் கின்னஸ் சாதனைக்கான முயற்சியை மேற்கொண்டனர். இந்தக் குழுவில் தமிழ்நாடு (கோவை), தெலுங்கானா, ஆந்திரப் பிரதேஷ், கர்நாடகா, மற்றும் கூர்கானைச் சேர்ந்த 5 குழந்தைகள், 4 பெண்கள் உள்பட 21 பேர் இடம்பெற்றனர். 

அதிகாலை 05.20 மணிக்கு தாஜ்மகாலில் தொடங்கிய இந்தப் பயணம், பொதுப் போக்குவரத்தின் மூலம் ஆக்ரோ ஃபோர்ட், பதேபூர் சிக்ரி, பாரத்பூர் தேசிய பூங்கா (ராஜஸ்தான்), ஹுமாயூன் கல்லறை, ரெட் ஃபோர்ட் மற்றும் குதூப்மினார் போன்ற யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களைப் பார்வையிட்டனர். அதுவும், திட்டமிடப்பட்ட 12 மணிநேரத்திற்குள்ளாகவே, அதாவது, 11 மணிநேரம் 35 நிமிடங்கள் 18 விநாடிகளில் 7 இடங்களையும் சுற்றிப் பார்த்துள்ளனர். 

"பதேபூர் சிக்ரியில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நமது நாடு பாதுகாப்பானது என்பதை உணர்த்தும் விதமாகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பயணத்தின் போது தட்பவெப்பநிலை போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது," என்றார் கோவையைச் சேர்ந்த என். சுரேஷ்குமார்.



இதேபோல, இந்தக் குழுவின் மற்றொரு உறுப்பினரான இந்து சுரேஷ கூறுகையில், "இந்தப் பயணத்தின் தொடக்கத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால், பொதுப் போக்குவரத்து உண்மையில் திருப்திகரமாக இருந்தது. அதேவேளையில், குழந்தைகளையும் பார்த்துக் கொள்வதும் எளிமையாக இருந்தது. தலைநகர் டெல்லியில் பொதுப் போக்குவரத்து பல்வேறு வகைகளைக் கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் பெண்களுக்கு எதிராக எந்த சம்பவங்களும் நடக்கவில்லை. இந்தப் பயணம் பாதுகாப்பானது என்பதை உணர்ந்தேன். மேலும், அனைத்துப் பகுதிகளிலும் கழிவறைகள் இருந்தன. அவை தூய்மையாக பராமரிக்கப்பட்டிருந்தன. அதோடு, குழந்தைகளை வைத்திருந்ததால், எங்களுக்கு உடனடியாக இருக்கைகள் கிடைத்தன.



தனது கணவர் கொடுத்த வாய்ப்பின் மூலம், தற்போது நான் சாதனையாளராக திகழ்கிறேன். இதேபோல, அனைத்து கணவர்களும், அவர்களின் மனைவிகளுக்கு ஆதரவாக இருந்தால், வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களில் சாதிக்கலாம்," என்றார். 

இதனிடையே, டெல்லியின் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, இந்தக் குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினார். தற்போது, இந்தக் குழுவினர், ஜான்சியில் இருந்து, கோவைக்கு சாலை மார்க்கமாக வந்து கொண்டிருக்கின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...