பழுதடைந்த குனியமுத்தூர் - புட்டுவிக்கி சாலையில் தி.மு.க.வினர் நாற்று நட்டு போராட்டம்

கோவை: குனியமுத்தூர் - புட்டுவிக்கி இடையிலான பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி தி.மு.க.,வினர் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: குனியமுத்தூர் - புட்டுவிக்கி இடையிலான பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி தி.மு.க.,வினர் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரையிலான போக்குவரத்து நெரிசலை குறைக்க, மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேம்பால பணிகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு, பாலக்காடு, மற்றும் குனியமுத்தூர் மார்க்கமாக வரும் பேருந்துகள் மற்றும் வாகனங்களை திருப்பி விட குனியமுத்தூர் அரசு பள்ளியிலிருந்து, புட்டுவிக்கி சாலை செல்ல ரூ. 11 கோடி மதிப்பீட்டில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையும், தடுப்பு சுவரும் அமைக்கப்பட்டது.

அவசர அவசரமாகப் போடப்பட்ட இந்த சாலை 2 மாதங்களே ஆனநிலையில், குண்டும்-குழியுமாக தற்போது காட்சியளிக்கின்றது. இதனிடையே, தற்போது மழை பெய்து வருவதால், இந்த புதிய சாலை அனைத்தும் மோசமாகி, சகதியாக மாறிவிட்டது. இந்நிலையில், தரமற்ற சாலை அமைக்கப்பட்டதைக் கண்டித்து கோவை மாநகர் மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் முத்துசாமி தலைமையில் தி.மு.க.,வினர் நாற்றுநட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இது குறித்து தி.மு.க. வைச் சேர்ந்த முத்துசாமி கூறுகையில்;- இந்த புதிய சாலை 10 நாட்களுக்கு முன்புதான் திறந்து வைத்தனர். அதற்குள் மிக மோசமான அளவில் பழுதடைந்து விட்டது. இந்த சாலை அமைப்பதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும், மாநகராட்சி நிர்வாகவும் மோசடி செய்துள்ளனர். இந்த சாலையை ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியிலேயே செப்பனிட வேண்டும். இல்லையேல் தி.மு.க., செயல்தலைவர் அனுமதியோடு நீதிமன்றத்தை நாடுவோம், என்றார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...