எத்தனையோ படங்களை ஹிட்டாக்கிய உதகை ஷுட்டிங் ஸ்பாட்ஸ்: தற்போது ஃப்ளாப்பாகிய அவலம்

படப்பிடிப்பிற்கான அனுமதி வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால், ஒரு காலத்தில் ரிச்சான அவுட்டோர் ஷூட்டிங் என்ற பெயரைப் பெற்ற உதகையை சினிமாத் துறையினர் மறந்து போகியிருப்பது சற்று வேதனையை அளிக்கிறது.

படப்பிடிப்பிற்கான அனுமதி வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால், ஒரு காலத்தில் ரிச்சான அவுட்டோர் ஷூட்டிங் என்ற பெயரைப் பெற்ற உதகையை சினிமாத் துறையினர் மறந்து போகியிருப்பது சற்று வேதனையை அளிக்கிறது. 

கருப்பு - வெள்ளை (Black&White) காலம் தொட்டு தற்போதைய டிஜிட்டல் யுகம் வரை உதகையில் படப்பிடிப்பு நடக்காத இடங்களே இல்லை என்று சொல்லலாம். மகேந்திரன், பாலுமகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் ஆகிய முன்னணி இயக்குநர்களின் கதைக் களமாக உதகை இருந்துள்ளது. முன்பு, குளு குளு காட்சிகளை படம்பிடிக்க காஷ்மீருக்கும், சிம்லாவுக்கும் ஓடிக் கொண்டிருந்தவர்கள், காஷ்மீரில் தீவிரவாதம் உச்சத்துக்குப் போனதும் உதகைப் பக்கம் திரும்பினார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உதகையும், கேமரா கண்களுக்கு குளுமை தந்தது. இதனால், பிறமொழி இயக்குநர்களும் உதகைக்கு வண்டியைத் திருப்பினார்கள்.

வருமானம் தந்த சினிமா :

சினிமா கம்பெனிகளின் இந்தத் தொடர் படையெடுப்பு உதகை மக்களின் பொருளாதாரத்துக்கும் வெகுவாக உதவியது. சினிமாக் கம்பெனிகளுக்குத் தேவையான வாகனங்கள் மற்றும் உணவு உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்தல் என உதகை மக்களுக்கு ஏகத்துக்கும் வருமானம் தந்தது. சினிமா தொழில் இதுதவிர, ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் தேவையையும் உள்ளூர் மக்களே பூர்த்தி செய்தார்கள்.

இந்த வருமானமெல்லாம் இப்போது சுத்தமாய் அடைபட்டுவிட்டது. காரணம், படப்பிடிப்பு நடத்த வனத்துறையினர் விதிக்கும் கெடுபிடிகள் என்கிறார்கள். உதகையில் சினிமா கம்பெனிகளுக்கு ஷூட்டிங் ஸ்பாட்களை ரெடி செய்து கொடுக்கும் புரொடக்ஷன் மேனேஜர் ஏ.டி.லாரன்ஸ் இதுகுறித்து நம்மிடம் பேசினார். “உதகையில் பூங்காக்கள், சாலைகள், அரசு கட்டிடங்களில் படப்பிடிப்பு நடந்தால் அரசுக்கும் வருவாய் கிடைக்கும். சுற்றுலாவும் மேம்படும். ஆனால், இப்போது இங்கே படப்பிடிப்பு நடத்துவதே பெரும் சவாலாய் இருக்கிறது," என்றார்.

கடுமையாக்கப்பட்ட நடைமுறைகள் :

மேலும், அவர் கூறியதாவது :- நகராட்சிப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த நாள் ஒன்றுக்கு ரூ. 25,000 ஆகவும், பூங்காக்களில் படப்பிடிப்பு நடத்த ரூ. 50,000 ஆகவும் படப்பிடிப்புக் கட்டணங்கள் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது. அத்துடன், படப்பிடிப்புக்கு அனுமதிபெறும் நடைமுறைகளும் கடுமையாக்கப்பட்டன.

உதகையில் வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் படப்பிடிப்பு நடத்தவேண்டுமானால் முன்பு, சென்னையிலுள்ள தலைமை வனப் பாதுகாவலரிடம் அனுமதி பெற்று, அதற்கான கட்டணத்தை கட்டினால் அனுமதி கிடைத்துவிடும். ஆனால், இப்போது, சென்னையில் அனுமதி பெற்றாலும் மாவட்ட வன அலுவலரிடம் ஒப்புதல் பெறவேண்டும். அந்த ஒப்புதலை சென்னைக்கு எடுத்துச்சென்று தலைமை வனப்பாதுகாவலரிடம் காட்டினால்தான் இறுதி அனுமதி கிடைக்கும்.

ஒற்றைச்சாளர முறையில்..

இதனால், முன்பு 3 நாட்களில் பெறப்பட்ட அனுமதிக்கு தற்போது 15 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. இதனால், படத்துக்கான பட்ஜெட் எகிறுவதுடன், நடிகர்களுக்கான கால்ஷீட்டிலும் பிரச்சினை ஏற்பட்டு, குறிப்பிட்ட நாளுக்குள் படப்பிடிப்பை முடிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இந்தச் சிக்கல்களால்தான் இப்போது சினிமா கம்பெனிகள் உதகைப் பக்கம் வரவே தயங்குகின்றன. பழையபடி உதகைக்கு சினிமா கம்பெனிகள் வரவேண்டுமானால், படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி அளிப்பதை ஒற்றைச்சாளர முறையில் எளிதாக்க வேண்டும், என்றார் லாரன்ஸ்.

சினிமா படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கும் நடைமுறைகளை எளிதாக்கினால் மட்டுமே உதகைக்கும் சினிமாவுக்குமான உறவு மீண்டும் மலரும் என நம்பப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...