கோவை: நீலகிரி, வால்பாறையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கோவை: நீலகிரி, வால்பாறையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், நீலகிரி மாவட்டம் மற்றும் வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தொடர்ந்து வால்பாறையில் கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து வால்பாறையில் பள்ளிகளுக்கு, 3-வது நாளாக இன்றும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல, நீலகிரி மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.