கோவை - சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை 13 மற்றும் 14-ம் தேதிகளில் ரத்து

கோவை: பொறியியல் பணிகள் காரணமாக வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் கோவை - சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



கோவை: பொறியியல் பணிகள் காரணமாக வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் கோவை - சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

கோவை - திருப்பூர் இடையிலான வஞ்சிபாளையம் ரயில்நிலையத்தில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், வரும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சேலம் வழியாக இயங்கும் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. மேலும், கோவை - சேலம் ரயில் வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. 

வரும் 14-ம் தேதி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்: 

அலப்பி - டாடா/தன்பாத் எக்ஸ்பிரஸ், கோவையில் சுமார் 60 நிமிடங்கள் நிறுத்தப்படும். அதாவது, நண்பகல் 12 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், மதியம் 1 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும்.

எர்ணாகுளம் - கே.ஆர்.எஸ்., பெங்களூரூ எக்ஸ்பிரஸ் ரயில், கோவையில் சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தப்படும். அதாவது, மதியம் 12.50 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், மதியம் 1.20 மணிக்கு புறப்படும். 

கோவை - சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது, மதியம் 2.55 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், 70 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

கோவை - சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 80 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. மதியம் 03.25 மணிக்கு கிளம்ப வேண்டிய ரயில், மாலை 04.45 மணிக்கு புறப்படுகிறது. 

கே.ஆர்.எஸ்., பெங்களூரூ - எர்ணாகுளம் ரயில் நிலையம் எக்ஸ்பிரஸ் ரயில் ஓமலூர் ரயில் நிறுத்தத்தில் 15 நிமிடங்களும், சேலத்தில் 30 நிமிடங்களும், சங்கரி துர்க்கில் 15 நிமிடங்களும், ஈரோடு ரயில் நிலையத்தில் 40 நிமிடங்கள் நிறுத்தப்படும். 

சென்னை சென்ட்ரல் கோயம்புத்தூர் கோவை எக்ஸ்பிரஸ் சுமார் 30 நிமிடங்கள் ஜோலார்பேட்டையிலும், 10 நிமிடங்கள் மொரப்பூரிலும், 30 நிமிடங்கள் சேலத்திலும், 20 நிமிடங்கள் ஈரோடு ரயில் நிலையத்திலும் நிறுத்தப்படும். 

சென்னை சென்ட்ரல் கோயம்புத்தூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 30 நிமிடங்கள் ஜோலார்பேட்டையிலும், 10 நிமிடங்கள் மொரப்பூரிலும், 20 நிமிடங்கள் சேலத்திலும், 20 நிமிடங்கள் ஈரோடு ரயில் நிலையத்திலும் நிறுத்தப்படும். 

இதேபோல, வரும் 13-ம் தேதி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள் : 

கோவை - சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ரயில், 1.40 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும். அதாவது, கோவையில் பிற்பகல் 02.55 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், மாலை 04.35 மணிக்கு இயக்கப்படுகிறது. 

கோவை - சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ், சுமார் 1.30 மணி நேரம் தாமதமாக கோவையில் இருந்து கிளம்புகிறது. மதியம் 03.33 மணிக்குப் புறப்பட வேண்டிய இந்த ரயில், மாலை 05.03 மணிக்கு புறப்படுகிறது. 

எர்ணாகுளம் ரயில்நிலையம்- பரௌனி ரயில்நிலையம் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில், 1.30 மணி நேரம் தாமதமாக புறப்படுகிறது. பிற்பகல் 03.33 மணிக்கு கிளம்ப வேண்டிய இந்த ரயில், மாலை 05.03 மணிக்கு இயக்கப்படுகிறது.

மங்களூரூ ரயில்நிலையம் - சென்னை எழும்பூர் ரயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதாவது, பிற்பகல் 03.40 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட வேண்டிய இந்த ரயில், 1.10 மணி நேரம் தாமதமாக, மாலை 04.50 மணிக்கு கிளம்புகிறது. 

திருவனந்தபுரம் - ஐதரபாத் சபரி எக்ஸ்பிரஸ் ரயில் கோவையில் இருந்து 35 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. மாலை 04.35 புறப்பட வேண்டிய இந்த ரயில், 05.10 மணிக்கு செல்கிறது. 

பாலக்காடு டவுன் - ஈரோடு பயணிகள் ரயில் வஞ்சிப்பாளையத்தில் 35 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு இயக்கப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...