மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழா தொடக்கம்: தயார் நிலையில் அடிப்படை வசதிகள்

கோவை: மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோவிலில் குண்டம் கண் திறப்பு நிகழ்ச்சியுடன் ஆடி குண்டம் திருவிழா இன்று தொடங்கியது.

கோவை: மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோவிலில் குண்டம் கண் திறப்பு நிகழ்ச்சியுடன் ஆடி குண்டம் திருவிழா இன்று தொடங்கியது.

கோவை மாவட்டத்தின் பிரசித்திபெற்ற அம்மன் திருத்தலமான மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி அருள்மிகு வன பத்திரகாளியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி குண்டம் விழா நடைபெறுவது வழக்கம்.

இக்கோவிலின் 27-ம் ஆண்டு ஆடி குண்டம் திருவிழாவிற்கான குண்டம் கண் திறப்பு நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பவானி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன. அப்போது, அம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

குண்டம்

கோவில் முன்பு சுமார் 36 அடி நீளத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் குண்டம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குண்டத்தினை பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தலைமை பூசாரி பரமேஸ்வரன் குண்டத்தினை சுற்றி வலம் வந்து சிறப்பு பூஜைகள் செய்து மேள தாளம் முழங்க குண்டத்தினை கண் திறந்து, ஆடி குண்ட திருவிழா நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.



இதனையடுத்து, 15 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் இருந்து சுமார் ஜம்பதாரயித்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் சிறப்பு பேருந்து வசதிகள், குடிநீர், சுகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என அனைத்தும் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...