அடுத்த அறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலம் மூடப்பட்டிருக்கும் - வனத்துறை

கோவை: மழை மற்றும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டிருக்கும் கோவை குற்றாலம் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடியே இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை: மழை மற்றும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டிருக்கும் கோவை குற்றாலம் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடியே இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக மழை பெய்து வருவதால் கோவை குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த மாதம் 9-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை கோவை குற்றாலம் மூடப்பட்டது. 

மழை ஓய்ந்ததன் காரணமாக, கடந்த மாதம் 25-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்ட குற்றாலம் நான்கு நாட்கள் செயல்பட்டது. ஆனால், மீண்டும் மழை தொடரவே மீண்டும் மூடப்பட்டது. கடந்த புதன்கிழமை வரை மொத்தமாக 17 நாட்கள் விடுமுறையில் இருந்த குற்றாலம் திறக்கப்பட்டது.

வியாழனன்று திறக்கப்பட்ட குற்றாலம், இரண்டே நாட்கள் செயல்பட்டு மீண்டும் சனிக்கிழமை மூடப்பட்டது. இப்படியான விடுமுறை காரணமாக அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் குழப்பமடைந்தனர். அங்கு சென்ற சிலர் ஏமாற்றங்களுடன் வீடு திரும்பினர். 

இந்த சூழலில் கோவை வனக்கோட்டத்தின் அறிவிப்பு வெளியாகும் வரையில் கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதியில்லை என்று வனத்துறை அறிவித்துள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...