தண்ணீர் தொட்டியை சேதமாக்கி தூக்கி எரிந்த மர்ம நபர்கள் : கண்டுகொள்ளாத திருப்பூர் மாநகராட்சி

திருப்பூர்: திருப்பூரில் மக்கள் பயன்படுத்தி வந்த தண்ணீர் தொட்டியை சேதப்படுத்தி, மர்ம நபர்கள் தூக்கி எரிந்த சம்பவம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாநகராட்சி அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்:  திருப்பூரில் மக்கள் பயன்படுத்தி வந்த தண்ணீர் தொட்டியை சேதப்படுத்தி, மர்ம நபர்கள் தூக்கி எரிந்த சம்பவம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாநகராட்சி அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளார். 

திருப்பூர் மாநகராட்சி 37-வது வார்டுக்குட்பட்ட செவந்தாம்பாளையம் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், அங்கு அமைக்கப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டியை தங்களது தேவைகளுக்காகப் பயன்படுத்தி வந்தனர். 



இந்நிலையில், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த இந்தத் தண்ணீர் தொட்டியைக் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மர்மநபர்கள் குழாயின் இணைப்பைத் துண்டித்து விட்டு, அப்பகுதியில் இருந்த பாழடைந்த கிணற்றில் போட்டுவிட்டனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தண்ணீருக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், உடனடியாக சரி செய்து தரும்படி கோரிக்கை விடுத்தும், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்து வருவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...