திருப்பூர்: திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க கெளரவ தலைவர் ஏ.சக்திவேல் தாயார் மறைந்ததைத் தொடர்ந்து, கேரள மாநில ஆளுநர் சதாசிவம் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
திருப்பூர்: திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க கெளரவ தலைவர் ஏ.சக்திவேல் தாயார் மறைந்ததைத் தொடர்ந்து, கேரள மாநில ஆளுநர் சதாசிவம் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
திருப்பூர் கொங்கு நகரில் உள்ள இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தென் மண்டல தலைவர் ஏ.சக்திவேலின் தாயார் பழனியம்மாள் நேற்று (08.07.18) அதிகாலை உடல்நலக் குறைவு காரணமாக அவரது இல்லத்தில் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு தொழில் அதிபர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கேரள மாநில ஆளுநர் சதாசிவம் இன்று சக்திவேலின் குடும்பத்தினர்களை சந்தித்து நேரில் ஆறுதல் தெரிவித்தார். கேரள ஆளுநர் வருகையை முன்னிட்டு கொங்கு நகர் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.