ஊதியம் வழங்காமல் ஏமாற்றிவிட்டதாக வடமாநில தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

கோவை: கோவை மாவட்டம் அன்னூரில் பணிபுரிந்ததற்கான ஊதியத்தை வழங்காமல் ஏமாற்றியதாக தனியார் நிறுவனத்தின் மீது வடமாநில இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: கோவை மாவட்டம் அன்னூரில் பணிபுரிந்ததற்கான ஊதியத்தை வழங்காமல் ஏமாற்றியதாக தனியார் நிறுவனத்தின் மீது வடமாநில இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

அன்னூர் கணேசபுரத்தில் ஸ்ரீவாராகி அம்மன் ஸ்டீல் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த 43 தொழிலாளிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் ஒப்பந்ததாரர் மூலம் வேலைக்கு சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு ஒப்பந்ததாரர் அவெஹய் ரயுத்ராய் நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்று சம்பளம் வழங்கி வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த மே மாதம் 15 நாள் சம்பளமும், ஜீன் மாதம் முழுச் சம்பளமும் வழங்காமல் ஒப்பந்ததாரர் இழுத்தடித்து வந்துள்ளார். தொழிலாளர்கள் சம்பளத்தை நிர்வாகத்திடம் கேட்டால் ஒப்பந்ததாரரிடம் கொடுத்து விட்டதாக தெரிவிப்பதாகவும், ஒப்பந்ததாரர் நிர்வாகம் பணம் கொடுக்கவில்லை என சொல்லி அலைக்கழிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். மேலும், ஊதியம் கிடைக்காததால் வடமாநில தொழிலாளர்கள் சாப்பிடக் கூட வழியின்றி இருந்து வருவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.



இதனையடுத்து, உழைப்போர் உரிமை இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் வடமாநில தொழிலாளர்கள் மனு அளித்தனர். வடமாநில தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்துள்ளதாகவும், நடவடிக்கை எடுக்க வில்லை எனில் அடுத்த கட்டமாக போராட்டம் நடத்துவது குறித்து இன்று மாலை முடிவு செய்ய இருப்பதாவும் உழைப்போர் உரிமை இயக்கத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...