கோவையில் அடுக்குமாடி வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க ஒப்புதல்!

கோவை: உக்கடம் கழிவுநீர் பண்ணை அருகே சூரியஒளி மின் உற்பத்தி திட்டத்திற்கும், டி.பி ரோட்டில் நவீன அடுக்குமாடி வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கவும் உயர் மட்டக்குழு நிர்வாக அனுமதி கிடைத்துள்ளது.



கோவை:  உக்கடம் கழிவுநீர் பண்ணை அருகே சூரியஒளி மின் உற்பத்தி திட்டத்திற்கும், டி.பி ரோட்டில் நவீன அடுக்குமாடி வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கவும் உயர் மட்டக்குழு நிர்வாக அனுமதி கிடைத்துள்ளது.

கோவையில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உக்கடம் பெரியகுளம் - வாலாங்குளம் மேம்பாடு மற்றும் டி.பி சாலையில் மாதிரி சாலை அமைக்கும் திட்டங்களுக்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. இந்நிலையில், உக்கடம் பகுதியில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில், ரூ.19 கோடி மதிப்பில் 3.2 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரியஒளி மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான திட்டத்திற்கு உயர்மட்ட குழு, நிர்வாக அனுமதி அளித்துள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, மின் கட்டணமாக மாநகராட்சி ஆண்டுதோறும் செலுத்தி வரும் ரூ. 5 கோடி மிச்சமாகும் எனக் கருதப்படுகிறது.

இதேபோல், நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைக் குறைக்க டி.பி.,ரோட்டில் (DB Road) ரூ.42 கோடி மதிப்பில் சுமார் 400 வாகனங்கள் நிறுத்தும் நவீன வசதிகளை கொண்ட அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டு நிர்வாக ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது, இதற்கும் நிர்வாக அனுமதி கிடைத்துள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...