நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியை இசபெல்லா ஜூலியின் இடமாற்றத்தை எதிர்த்து அந்த அப்பள்ளி மாணவர்கள் அழுது பாச போராட்டத்தை நடத்தினர்.

சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியகரம் பகுதி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் பகவான் இடமாற்றத்தைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் அவரை சூழ்ந்து கொண்டு, அழுது அவரை வெளியேற விடாமல் பாசப்போராட்டம் நடத்தினர்.
இதே போன்ற சம்பவம் தற்போது நாக்கை மாவட்டத்திலும் நடைபெற்றுள்ளது.
பொய்கைநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் இங்கு பணியாற்றி வரும் இசபெல்லா ஜூலி என்ற ஆசிரியை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய மாவட்ட கல்வி அலுவலகம் உத்தரவிட்டது.
இந்த இடமாற்றத்துக்கு பள்ளி மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பெற்றோர்களுடன் இணைந்து திடீர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில் ஆசிரியர் குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியும் போராட்டம் நடத்தினர்.
இதே பள்ளியில் அவர் தொடர வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்த மாணவர்கள் ஆசிரியையை சூழ்ந்து கொண்டு, "மிஸ் போகாதீங்க மிஸ்" என்று கூறி கதறி அழுதனர். இதைப் பார்த்த அந்த ஆசிரியையும் கண்ணீர் சிந்தினார்.
இந்த சூழலில், இசபெல்லா ஜூலி அதே பள்ளியில் சில காலத்துக்கு தொடருவார் என்ற வாய்மொழி உத்தரவை அம்மாவட்ட கல்வி அலுவலகம் பிறப்பித்துள்ளது.
மாணவர்களின் இந்த பாசப் போராட்டம் அப்பள்ளி ஆசியர்களையும், ஊர் மக்களையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.