உதகையில் 12 ஆண்டு கால உழைப்பில் உருவான நூல் பூங்கா : பொதுமக்கள் வரவேற்பு

நீலகிரி: உதகை படகு இல்லம் எதிரே 10 ஆயிரம் சதுர அடியில், நூல் மலர்களால் ஆன உலகின் முதல் நூல் பூங்காவை வடிவமைத்துள்ளார் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அண்டனி ஜோசப்.


நீலகிரி: உதகை படகு இல்லம் எதிரே 10 ஆயிரம் சதுர அடியில், நூல் மலர்களால் ஆன உலகின் முதல் நூல் பூங்காவை வடிவமைத்துள்ளார் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அண்டனி ஜோசப்.

உள்ளரங்கில் அமைக்கப்பட்டு தோட்டத்தினுள் நுழைந்தால், வண்ண வண்ண மலர்கள் நம்மை வரவேற்கின்றன. நடைபாதையை ஒட்டிய புல்வெளி, மலர் தொட்டிகளில் தொங்கும் மலர்கள், குளத்தில் மதிக்கும் தாமரைகள் பார்வையாளர்களை வசீகரிக்கின்றன.

அங்குள்ள மலர்கள், தாவரங்கள் மற்றும் புல்வெளிகள் அனைத்தும் நூலால் வடிவமைக்கப்பட்டவை என பூங்கா ஊழியர்கள் கூறினாலும், நம் மனது அதை நம்ப மறுக்கிறது. பூங்கா ஊழியர்கள், அனைத்து மலர்கள் குறித்தும், அவற்றை உருவாக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்தும் விளக்குகின்றனர்.

12 ஆண்டு உழைப்பு

பூங்காவை வடிவமைக்க 12 ஆண்டுகள், 50 திறமையான பெண்களின் உழைப்பு தேவைப்பட்டிருக்கிறது. பூங்கா நிறுவனர் அண்டனி ஜோசப், தனது கலை தாகம் குறித்து நம்மிடம் கூறியதாவது:- 

எனக்கு கலை மீது தீராத தாகம். ஓவியம், சிற்பம் வடிவமைத்துக் கொண்டிருந்தேன். கேரளாவில் 80-களில் கோட்ஸ் வயலா லிமிடெட் நூல் நிறுவனத்தின் சார்பில் நடந்த கண்காட்சியில், நூலைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கலை பொருட்களை காட்சிப்படுத்தினேன்.



அதற்கு கிடைத்த வரவேற்பும், அந்த நிறுவனத்தார் கொடுத்த ஊக்கத்தால் இயந்திர உதவி இல்லாமல், கைகளைக் கொண்டே நூல் பயன்படுத்தி கலை பொருட்கள் தயாரிக்க முடிவு செய்தேன். கடந்த 1988-ம் ஆண்டு, 9 உறுப்பினர்கள் கொண்டு எனது ஆய்வைத் தொடங்கினேன். 

மலர்கள் மற்றும் தாவரங்களை அவற்றின் அசல் தன்மை மாறாமல் வடிவமைக்கத் தொடங்கினேன். இறைவன் அருளால் நவம்பர் கடந்த 2002-ம் ஆண்டு நூல் மலர்களைக் கொண்ட தோட்டம் அமைக்க முடிந்தது. 50 திறமையான பெண்களின் 12 ஆண்டுகள் அயராத உழைப்பினால் உதகையில் உலகின் முதல் நூல் பூங்காவை அமைக்கப்பட்டது. 



தோட்டத்தில் உள்ள மலர்கள், தாவரங்கள், புல்வெளி அனைத்தும் நூல்களைக் கொண்டு கைகளாலேயே வடிவமைக்கப்பட்டன. இதற்காக, 6 கோடி மீட்டர் நூல் பயன்படுத்தப்பட்டது. தண்டுகளை கம்பியாலும், மலர்களின் இதழ்கள் மற்றும் இலைகள் சட்டை காலரில் பயன்படுத்தப்படும் கேன்வஸ் பயன்படுத்தி வடிவமைத்து, பின்னர் மலரின் நிறத்திலான நூலைக் கொண்டு மலர்கள் வடிவமைக்கப்பட்டன.



இந்த பூங்காவில், 150 ரக தாவரங்களின் மாதிரிகள் உள்ளன. இதில், குறிப்பிடத்தக்கவை நீலகிரி குறிஞ்சி, ஆர்கிட் மலர்கள்.



இந்த அதிசய பூங்காவை காண தற்போது உலகெங்கிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். தற்போது இந்த நூல் பூங்கா தமிழ்நாடு புக் ஆஃப் ரிகார்ட்ஸ் மற்றும் யூனிக் வர்ல்டு ரிகார்ட்ஸ் புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது.

என்று கூறி முடித்தார்.

பராமரிப்பு சிரமம்

பூங்கா பாராமரிப்பு அதன் பொறுப்பாளர் கூறுகையில், "காலநிலை மாற்றத்தால் நூலின் நிறம் மங்கி விடும் என்பதால், உள்ளரங்கில் குறிப்பிட்ட ஒளி அமைக்கப்பட்டுள்ளது. மலர்கள் மீது தூசு படிந்து விடும் என்பதால், தூசு ஏற்படாமல் எந்நேரமும் தண்ணீர் தெளித்து, சுத்தமாக பராமரிக்க வேண்டும். 



பூங்காவை பராமரிக்க மூன்று பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கான ஊதியம், பராமரிப்பு செலவு அனைத்துமே, சுற்றுலாப் பயணிகளை நம்பியே உள்ளது. நுழைவுக் கட்டணம் தான் பூங்காவின் வருமானம். 

கோடை காலம் மற்றும் இரண்டாம் பருவ காலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆண்டின் நான்கு மாதம் மட்டுமே வருவாய் கிடைக்கும். மேலும், நூலைக் கொண்டு பரிசுப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறோம். 



இந்த வருவாயைக் கொண்டு பூங்காவை ஆண்டு முழுவதும் பராமரிக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து விட்டால் பூங்காவை பராமரிப்பது கேள்விக்குறியாகிவிடும். ஆண்டனி ஜோசப்பின் கலை தாகம் காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக இந்த பூங்கா பராமரிக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்து படைத்து வருகிறது." என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...