டாஸ்மாக் தகராறில் ஈடுபட்ட மூன்று பேர் கைது: 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை: கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி அருகே டாஸ்மார்க்கில் தகராறில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 3 பேரில் இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.


கோவை: கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி அருகே டாஸ்மார்க்கில் தகராறில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 3 பேரில் இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

காமராஜர்புரத்தைச் சேர்ந்த கௌதம் (24), கண்ணப்பன் நகர் சேர்ந்த சுஜி மோகன் (25), கணபதியைச் சேர்ந்த பிரவின் (23) ஆகியோர் கடந்த மாதம்  7-ம் தேதி சின்னவேடம்பட்டியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது அருந்தச் சென்றனர். அவர்கள் அங்கிருந்த சிவா என்பவரிடம் மதுபானம் கேட்டு தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு சென்றுவிட்டனர்.

இந்த புகாரின்பேரில் போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதில் கௌதம், சுஜிமோகன் ஆகிய 2 பேர் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பது தெரியவந்தது. எனவே, அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் ஆணையர் பெரியய்யாவுக்கு சரவணம்பட்டி போலீசார் பரிந்துரை செய்தனர். இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் ஆணையர் பெரியய்யா உத்தரவிட்டார். அதன்படி, கோவை மத்திய சிறையில் இருக்கும் கௌதம் மற்றும் சுஜிமோகன் ஆகியோரிடம் அதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...