பழம்பெரும் பின்னணி பாடகி பி.சுசீலாவிற்கு இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா விருது

மேட்டுப்பாளையம்: மறைந்த பாலமுரளி கிருஷ்ணாவின் 88-வது பிறந்த நாளையொட்டி, பாடகி பி.சுசீலாவிற்கு “பாலமுரளி நாத மகோத்சவ்” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம்: மறைந்த பாலமுரளி கிருஷ்ணாவின் 88-வது பிறந்த நாளையொட்டி, பாடகி பி.சுசீலாவிற்கு “பாலமுரளி நாத மகோத்சவ்” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற விழாவில் மறைந்த இசை மேதை பாலமுரளிகிருஷ்ணாவின் பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்படும் “பாலமுரளி நாத மகோத்சவ்” விருது பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவிற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

தனது இசை திறமையால் பெரிதும் போற்றப்பட்டு நாட்டின் உயரிய விருதான பத்மவிபூஷன் விருதை பெற்ற டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் பெயரில், ஆண்டுதோறும் அவரது நினைவு அறக்கட்டளை சார்பில் இசைத்துறையை சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இன்று அவரது 88-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் அவரது பெயரிலான “டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா கலையரங்கம்” என்ற ஆடிட்டோரியம் திறந்து வைக்கப்பட்டது. இதனை பிரபல நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் பாலமுரளிகிருஷ்ணா குழுவினரின் கர்நாடக இசை கச்சேரி நடத்தப்பட்டது. பின்னர், நடைபெற்ற விழாவில் 2018-ம் ஆண்டிற்கான “பாலமுரளி நாத மகோத்சவ்” விருது பிரபல பழம்பெரும் பின்னணி பாடகி பி.சுசீலாவிற்கு வழங்கப்பட்டது. இவ்விருதினை மூத்த இசைக்கலைஞர் டாக்டர் டி.வி.கோபாலகிருஷ்ணன் வழங்கினார். பாலமுரளிகிருஷ்ணா தங்களது இசைகுரு என தெரிவித்து அவரது சாதனைகள் குறித்து பத்மா சுப்பிரமணியம் மற்றும் பி.சுசீலா ஆகியோர் பேசினர். 

நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களிடம் பி.சுசீலா பேசிய போது, மறைந்த பாலமுரளிகிருஷ்ணாவுடன் இணைந்து பாடிய தமிழ் திரைப்பாடலான “தங்கரதம் வந்ததே” என்ற என்ற பாடலின் சில வரிகளை பாடினார்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...